News June 12, 2024
புதுக்கோட்டை அருகே நாளை மின்தடை

கீரமங்கலம், துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் கீரமங்கலம், மேற்பனைக்காடு,சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி. கொடிக்கரம்பை,காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 3, 2025
புதுகை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
புதுகை: அரிவாள் வெட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது

விராலிமலையைச் சேர்ந்தவர் கருப்பையா (42), இவரது வீட்டுக்கு அருகே சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பாண்டியனிடம் சிறுவனும் அவருக்கு ஆதரவாக கருப்பையா, இவரது தம்பி கோவிந்தராஜ் (36) ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவிந்தராஜ் கருப்பையாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
News November 3, 2025
புதுகை: பசுமாடு மோதி தொழிலாளி பலி!

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (48), இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாட்டிற்கு சக்திவேல் தீவணம் வைத்து கொண்டிருந்தார். அப்போது மாடு எதிர்பாராதவிதமாக சக்திவேலை முட்டி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


