News September 11, 2025

புதுக்கோட்டையில் 20,000 டன் நெல் கொள்முதல் இலக்கு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்வாண்டு 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 20,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு 45 நிலையங்கள் மூலம் 15,218 டன் நெல் வாங்கப்பட்டு ரூ.36.78 கோடி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. நெல்லை பாதுகாப்பாக சேமித்து பணம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News September 11, 2025

புதுக்கோட்டை: இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !

News September 11, 2025

புதுகை : நாளை எங்கெல்லம் முகாம் தெரியுமா?

image

புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெருங்கொண்டான் விடுதி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வந்தனாக்கோட்டை, அன்னவாசல் ஒன்றியம் வீரப்பட்டி, அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம், அரிமளம் ஒன்றியம் இசேவை மையக்கட்டிடடம், பொன்னமராவதி பேரூராட்சி அம்மன் சமுதாயகூடம் உள்ளிட்ட இடங்களில் நாளை(செப்.12) நடக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News September 11, 2025

புதுகை: அம்பேத்கார் உருவ சிலைக்கு முன் திருமணம்

image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு முன் விடுதலை கட்சி நிர்வாகி சிறுத்தை சிவா தலைமையில், கணபதிபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி மகேஷ்வரன்-பிரியா ஆகியோர் மாலை மாற்றி ஜாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!