News August 6, 2025
புதுக்கோட்டையில் வாழ்ந்த ஆதிமனிதன்?

புதுக்கோட்டையில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மேலும் இந்த ஊரை சுற்றி செம்பு மற்றும் இரும்புகளால் ஆன உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்கு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 7, 2025
புதுக்கோட்டை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டு எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் வகையில், ஷேர் செய்யுங்கள்!
News August 6, 2025
புதுகை: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
புதுகை: நாளை மின்தடை அறிவிப்பு

புதுகை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.7) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.