News March 22, 2024
புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி!

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 30, 2025
புதுக்கோட்டை: குழந்தை வரம் அருளும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விருத்தபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் குழந்தை பேறு வேண்டுவோர், மூலவரான விருத்தபுரீஸ்வரரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 30, 2025
வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யாதோருக்கு நோட்டீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 33,374 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பு பணி இன்று முதல் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையத்தில் அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
புதுக்கோட்டை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு இங்கே <


