News April 19, 2025

புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

image

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க) 

Similar News

News August 8, 2025

புதுகையில் ஜான்பாண்டியன் சுற்றுப்பயண விவரம்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் நமனசமுத்திரம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் 24ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள சமூக சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

News August 8, 2025

புதுக்கோட்டை: சிலிண்டர் குறித்த புகாரா?

image

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News August 8, 2025

புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, கணேஷ் நகர் கார்த்திக் மஹால், அறந்தாங்கி வசந்தம் மஹால், கே.புதுப்பட்டி சமுதாயக்கூடம், கோட்டைப்பட்டினம் இ-சேவை மையம், மீமிசல், இலுப்பூரில் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!