News June 19, 2024
புதுக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது

புதுகை மாவட்டத்தில் 1433 பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. புதுகை வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறையினரின் நிலஅளவைக் கருவிகள், சங்கிலிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ஆட்சியர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அப்போது
நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News August 29, 2025
புதுகை மாவட்டத்தில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஆக.30) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தொண்டைமான் நல்லூர், திருமயம், புதுக்கோட்டை, கீரனூர், சிப்காட், குடுமியான்மலை, அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 29, 2025
புதுகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(ஆக.28) இரவு 10 மணி முதல் இன்று(ஆக.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.
News August 28, 2025
புதுகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!