News August 31, 2025

புதுக்கோட்டைக்கு மாநில அந்தஸ்து!

image

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது புதுக்கோட்டை சமஸ்தானம், தனி மாநிலமாக விளங்கிய எல்லைக் கல் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தனி சமஸ்தானமாக விளங்கிய புதுக்கோட்டை பல்வேறு காலகட்டங்களில் ஆங்கிலேயருக்கு இணக்கமாக இருந்து தன் அரசைப் பாதுகாத்து வந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948 மார்ச் மாதம் 3 ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் ராஜகோபாலத் தொண்டைமானால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Similar News

News September 3, 2025

புதுகை: குழந்தைகள் உதவி மையத்தில் வேலை

image

புதுகை மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலகத்தில் குழந்தைகள் உதவி மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு முறையே டிகிரி, 12-ம் வகுப்பு முடித்தோர் https;//Pudukkottai nick.in இல் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் செப்.,12-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.,8-ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அதில் 10, 12, பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை உதவித்தொகையுடன் சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

புதுகை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமையில், புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் செப்.,4-ம் தேதி காலை10.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!