News June 8, 2024
புதுக்கோட்டை:ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

கடற்கரையோர காவல் நிலைய ஊர் காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 10ம் தேதி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்விச் சான்றிதழ்கள் அசல் மட்டும் நகலுடன் நேரில் வருமாறு புதுக்கோட்டை எஸ்பி செய்தி வெளியீடு.
Similar News
News November 2, 2025
புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை வழியாக திருச்சி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் திருச்சியிலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண்: 16845, அதேபோல் வண்டி எண்: 16486, 16849 ஆகிய ரயில் வண்டிகளும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News November 2, 2025
புதுகைக்கு சரக்கு ரயிலில் வந்த 1300 டன் உரங்கள்

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாய பணிகளுக்கு தேவையான 1300 டன் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 723 டன், டிஏபி 255 டன், NPK 127 டன், அமோனியம் 190 டன் தூத்துக்குடியில் இருந்து இன்று (நவ.02) புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது. புதுக்கோட்டை விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
புதுக்கோட்டை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


