News April 8, 2024
புதுக்கோட்டை:அலுவலர்களுக்கு தேர்தல் பணிப்பயிற்சி !

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பணிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.
Similar News
News February 13, 2026
புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுக்கோட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 39 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில், 56,614 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


