News August 16, 2024
புதுக்கோட்டை அருகே இளம்பெண் மர்ம மரணம்

கீரனூர் அருகே ஒள்ளத்துப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (38) – போதும்பொண்ணு (28) தம்பதி. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதும்பொண்ணு வீட்டில் மயங்கி கிடந்ததாக தெரிகிறது. மயங்கி கிடந்தவரை அவரது பெற்றோர் வந்து எழுப்பிய போது, காதில் ரத்தம் வழிந்து, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Similar News
News November 1, 2025
புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
புதுக்கோட்டை: இயந்திரத்தில் சிக்கி விவசாயி பரிதாப பலி

விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடியைச் சேர்ந்தவர் ராசப்பன் (50) விவசாயி. இவர் இன்று காலை (நவ.1) தனது வயலில் பவர் டில்லர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பவர் டில்லர் கையில் இருந்து நழுவி அவரது நெஞ்சில் வேகமாக மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 1, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

புதுக்கோட்டை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <


