News December 23, 2025

புதுகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

image

புதுகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 27, 2025

புதுக்கோட்டை: 3 பவுன் சங்கிலி பறிப்பு

image

அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவமாலை, இவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு இவரது வீட்டின் அருகே உள்ள மாட்டுத்தொழுவத்தில் சிவமாலை பால் கறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் சிவமாலையை இரும்பு கம்பியால் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கீரமங்கலம் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News December 27, 2025

புதுக்கோட்டை: லாரி கவிழ்ந்து விபத்து!

image

புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு எம்.சாண்ட் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. இந்நிலையில் அந்த லாரி புதுப்பட்டி நெப்பிய குளம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயமின்றி தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News December 27, 2025

புதுகை: பிளாஸ்டிக் கவரில் கிடந்த பச்சிளம் குழந்தை

image

புதுக்கோட்டை சின்ன திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் இருந்த குழந்தையை நாய் இழுத்துச் சென்றதை பார்த்த கல்லூரி மாணவி ஒருவர் நாயை துரத்திவிட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் உள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மாநகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!