News December 28, 2025
புதுகை: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-இளைஞர் கைது

அம்மாபட்டினம் அடுத்த ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா(27). இவர் கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிகளின் பெற்றோர் கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 28, 2025
புதுக்கோட்டை: பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த இடையப்பட்டி கிளை சாலையில் மணி அழகர்(34) என்பவர், நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த பட்டுச்செல்வம்(44), மோதியதில் படுகாயம் அடைந்த மணி அழகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கோமதி(29), அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
புதுக்கோட்டை: வாக்காளர் சிறப்பு முகாம் – கலெக்டர் அழைப்பு!

புதுகை மாவட்டத்தில் 1681 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் 2-ம் நாளாக இன்று நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் உடனடியாக தங்களை இணைத்துக் கொள்ளும் படியும், மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
News December 28, 2025
புதுக்கோட்டை-இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


