News March 26, 2025
புதுகை: 19-ம் நூற்றாண்டின் கல்வெட்டில் அரிய தகவல்

புதுகையில் நைனா ராஜூ தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியின் போது 19-ம் நூற்றாண்டு கல்வெட்டு வெளிப்பட்டது. இக்கல்வெட்டு மூலம் 1858-ம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்கிறது. அதில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, ராஷச வருடம் வைகாசி மாதம், ஆங்கில வருடம் 1855 மே மாதம் எனவும், கல்வெட்டில் 4 வகையான ஆண்டு கணக்குகள் இருந்துள்ளது என்றனர்.
Similar News
News April 2, 2025
புதுக்கோட்டை: பொன் வழங்கும் பொன்வாசிநாதர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இங்கு புதிதாக வாங்கிய தங்க நகையினை பொன்னால் ஆன இறைவனுக்கு அர்ச்சனையில் வைத்து வழிபட்டால், வீட்டில் மேலும் மேலும் பொன் செல்வம் பெருகுமென நம்பப்படுகிறது.மேலும், நகை கடை வைத்திருப்பவர்களின் தொழில் மேம்படும். உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து செல்வம் பெருக்க உதவுங்கள்.
News April 2, 2025
புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
புதுகையில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

புதுகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Tailor பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் <