News January 1, 2026

புதுகை: வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

image

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக்(40), கேசவ்(33), நித்தின்(33) ஆகியோர் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி 2 டூவீலர்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுகை – கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவ் புதுகை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News January 1, 2026

புதுகை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், ht<>tps://cms.rbi.org.in <<>>என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News January 1, 2026

புதுகை: வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து!

image

நமணசமுத்திரத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் தீரஜ்குமார் (31). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று பணியில் இருந்த போது ரெயில் வந்ததால் ரெயில்வே கேட்டை மூடினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கேட்டை திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

புதுக்கோட்டை அருகே வாலிபர் பரிதாப பலி

image

குடுமியான்மலை அடுத்த குருக்களையாப்பட்டியைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமநாடு கிரசர் அருகே வந்தபோது ஆறுமுகம் என்பவரது  கடைக்கு முன் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!