News April 18, 2024

புதுகை: வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

image

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Similar News

News October 28, 2025

புதுக்கோட்டை: தபால் துறையில் வேலை- ரூ.30,000 சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

புதுகை: குடும்ப சண்டையை தடுத்தவருக்கு கத்தி குத்து

image

விராலிமலை ஒன்றியம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வந்து அவரது மனைவி சோபனாவை தாக்கியுள்ளார். அப்போது வந்த சோபானாவின் சகோதரன் மாதவன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாதவனை சலூன் கடை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சி GH-ல் சேர்த்தனர். மாத்தூர் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News October 28, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!