News September 22, 2025

புதுகை: வங்கியில் வேலை..ரூ.80,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

Similar News

News October 31, 2025

புதுக்கோட்டை: கூலித் தொழிலாளி மர்ம மரணம்

image

புதுக்கோட்டை, அடப்பன்வயலை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் நார்த்தாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு பயணியர் நிழற்குடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 31, 2025

புதுக்கோட்டை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 31, 2025

புதுக்கோட்டை: லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

image

கீரனூர் அடுத்த நவாப்பட்டியைச் சேர்ந்த ஹரிகரன் (29) என்பவர், நேற்று முன்தினம் இரவு வடமாநில தொழிலாளி ஒருவருடன் பைக்கில் கீரனூர் வந்துவிட்டு ஒடுகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் சென்று கொண்டிருந்த லாரியில் பைக் மோதியதில், தூக்கி வீசப்பட்டு ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடமாநில தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!