News December 24, 2025

புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Similar News

News December 25, 2025

புதுகை: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற<> www.tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 25, 2025

புதுகை: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் வருகிற 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

புதுகை: கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

image

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322-221695,
2. பேரிடர் கால உதவி -1077,
3. குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
4. பாலியல் துன்புறுத்தல் உதவி – 1091,
5. காவல் துறை துணை கண்கானிப்பாளர் – 04322-222236,
6. விபத்து அவசர வாகன உதவி – 102.
இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!