News December 24, 2025
புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News December 25, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டையில் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு கடந்த 18ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவியர் Passport size photo, ஆதார் அட்டை, நுழைவுச் சீட்டு நகலுடன் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை: இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் அபிநயா (23), TNPSC தேர்வுக்கு படித்து வந்தார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய நிலையில், வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார்.