News August 6, 2025
புதுகை: ரூ.64,000 சம்பளத்தில் Bank வேலை!

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்கள் போனில் இருந்தே விண்ணப்பிக்க <
Similar News
News August 6, 2025
புதுகை: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
புதுகை: நாளை மின்தடை அறிவிப்பு

புதுகை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.7) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
துவரை பயிர் சாகுபடிக்கு ரூ.7750 மானியம்

விராலிமலை வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் துவரை நாற்று மூலம் நடவு பயிராக சாகுபடி மேற்கொள்ளும் வேளாண் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7,750 மானியம் வழங்கப்பட உள்ளதாக விராலிமலை உதவி வேளாண் இயக்குனர் பா.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.