News November 7, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கறம்பக்குடி, நரங்கிப்பட்டு, தீத்தான்விடுதி, பிலாவிடுதி, கறம்பவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கான குடிமைப் பொருட்கள் கொடுப்பதற்கான திட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இல்லங்களுக்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: போலீஸ் வீட்டில் திருடிய பெண் அதிரடி கைது

புதுக்கோட்டை கம்பன் நகரில் உள்ள பெண் தலைமை காவலர் அபர்ணா வீட்டில் கடந்த ஜன.30 அன்று 35 சவரன் நகைகள் திருடு போனது. இதனையடுத்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து நகையை மீட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்ணையும் 48 மணி நேரத்தில் கைது செய்த புதுக்கோட்டை நகர காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.