News October 16, 2025

புதுகை: மழைக்கால உதவி எண் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் அவசர கால உதவி எண்:04322-222207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தெரிவித்துள்ளார்

Similar News

News October 16, 2025

புதுகை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை ரெடி!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

புதுகை: பிணமாக கரை ஒதுங்கிய உடல்!

image

மீமிசல் அடுத்துள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

News October 16, 2025

புதுகை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி

image

புதுக்கோட்டை, தட்டாம்பட்டியில் இருந்து கீரனூருக்கு பழனிவேல்(57), கார்த்திகா (21), லக்ஷ்சனா ஸ்ரீ (3), இவர்களது 3 மாத குழந்தை பிரகதீஷ் 4 பேரும் சென்றுள்ளனர். அப்போது இளையாவயல் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு பின்னால் காரில் வந்த சுப்பிரமணியன் (58) மோதியதில் 3 மாத ஆண் குழந்தை பிரகதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!