News September 22, 2025
புதுகை: மணல் கடத்திய 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி போலீஸார் துவார் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற சுமை தூக்கும் ஜீப்பை சோதனையிட்டதில் அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த ராமகிருஷ்ணன்(48), புருஷோத்தமன்(29) ஆகிய 2 பேரை கைதுசெய்த போலீஸார் ஜீப்பை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
புதுக்கோட்டை: கூலித் தொழிலாளி மர்ம மரணம்

புதுக்கோட்டை, அடப்பன்வயலை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் நார்த்தாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஒரு பயணியர் நிழற்குடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 31, 2025
புதுக்கோட்டை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
புதுக்கோட்டை: லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

கீரனூர் அடுத்த நவாப்பட்டியைச் சேர்ந்த ஹரிகரன் (29) என்பவர், நேற்று முன்தினம் இரவு வடமாநில தொழிலாளி ஒருவருடன் பைக்கில் கீரனூர் வந்துவிட்டு ஒடுகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் சென்று கொண்டிருந்த லாரியில் பைக் மோதியதில், தூக்கி வீசப்பட்டு ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடமாநில தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


