News January 19, 2025
புதுகை மக்களுக்கு வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) பணிபுரிய தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தார். இதுகுறித்து அவா் கூறியது, புதுக்கோட்டை மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) குழந்தைகள் நலன்சாா்ந்த இந்த மையத்தில் பணியாற்ற 3 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் <
Similar News
News November 8, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் வரும் ஜன.24 தேசிய பெண்குழந்தை தினத்தன்று மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் உள்ளிட்ட வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும் ரூ 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270 மூலமாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
புதுகை: நாய் குறுக்கே வந்ததால் விபத்து!

புதுக்கோட்டையிலிருந்து கத்தக்குறிச்சிக்கு முருகன் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார்.அப்போது கத்தக்குறிச்சி இடுகாடு அருகே உள்ள சாலையில் நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த அவர் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வல்லத்ரா கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
புதுகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (பாகம்-2)


