News February 26, 2026
புதுகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள், 4322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 26, 2026
புதுகை: ரூ.50,000 சம்பளத்தில் வேலை – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி நிரப்பபட உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற வங்கி அலுவலராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் ரூ.50,000 வழங்கப்படும். இதற்கு மார்.5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
புதுகோட்டை: பொதுத்தேர்வு – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் 241 மையங்களில் 41,609 மாணவர்கள் எழுதயுள்ளனர். மார்- ஏப் மாதத்தில் நடைபெற உள்ள இத்தேர்வு பணிக்கு 3369 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 330 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட உள்ளன. எனவே மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 26, 2026
புதுக்கோட்டை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

புதுக்கோட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <


