News November 6, 2025
புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

மழையூர் கீழப்பட்டி சேர்ந்த 17 வயது இளைஞர், வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை அமரேசன் செல்போன் பார்க்காதே என (நவ.3) கண்டித்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர், நேற்று அந்த பகுதியில் கிணற்றில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய மழையூர் போலீசார் விசாரணை செய்கினர்.
Similar News
News January 27, 2026
புதுக்கோட்டை: விபத்தில் விவசாயி பலி

காரையூர் அருகே கூடுதலைப்பட்டியிலிருந்து நெருஞ்சிக்குடிக்கு நேற்று விவசாயியான ராஜேந்திரன் (65) பைக்கில் சென்றுள்ளார். அப்போது நெருஞ்சிகுடி பெரிய கண்மாய் பாலத்தின் அருகே உள்ள சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த பாலாஜி (31) மோதியதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து விராலிப்பட்டி அடுத்த கோமாபுரத்திற்கு நேற்று கருப்புசாமி (43) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடுகப்பட்டி சாலையில் அவருக்கு எதிரே டாரஸ் லாரியை ஒட்டி வந்த விஜய் (32) மோதியதில் கருப்புசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சுபா அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
புதுகை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.01.2026 ) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்கு, இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


