News October 16, 2025

புதுகை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை ரெடி!

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 16, 2025

புதுகை: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த கருக்காக்குறிச்சி பிள்ளையார் கோவில் அருகே, வீரபத்திரன் (33) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து கருக்கா குறிச்சி சரக விஏஓ ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வடகாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து மேலும் அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 16, 2025

புதுகை: இரண்டு புறக்காவல் நிலையங்கள் திறப்பு

image

விராலிமலை பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேகுப்தா அறிவுறுத்தலின் பேரில் செக்போஸ்ட், காமராஜர் நகர் 2 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஷிப்ட் அடிப்படையில் 4 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூடும் கூட்டங்களை கண்காணித்து சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

புதுகை: அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!