News January 31, 2026

புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

image

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை (பிப்ரவரி 1) வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் அனைத்து மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

புதுக்கோட்டை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

புதுகை: போதை ஊசி பயன்படுத்திய 3 பேர் கைது

image

அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையில் நேற்று (பிப்ரவரி 13) அறந்தாங்கி அங்காளம்மன் கோயில் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு போதை ஊசி வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.

News February 14, 2026

புதுக்கோட்டை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

புதுக்கோட்டை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!