News August 18, 2025
புதுகை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க!

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..
Similar News
News August 19, 2025
புதுகை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 21ம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், தெரிந்து கொள்வதுடன் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என ஆட்சியர் மு.அருணா அறிவித்துள்ளார்.
News August 19, 2025
புதுகை: தினம் தினம் பரிசு..ஆட்சியர் அறிவிப்பு!

புதுகை அருங்காட்சியக காட்சிப்பொருட்கள் தொடர்பான புதிர்கள் போட்டி ஒரு நாளுக்கு ஒரு வினா 1 பரிசு வீதம் 5 நாட்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், சரியான வினாக்களை எழுதி அருங்காட்சியகத்தில் உள்ள பெட்டியில் போடவேண்டும். (ஆக.,23) அன்று இப்போட்டியில் சரியான பதில் அளித்தவர்கள் குலுக்கல் முறையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 19, 2025
தரிசு நிலங்களை விளைநிலமாக மாற்ற ரூ.9,600 மானியம்

கலைஞரின் அனைத்து கிராம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் (KAVIADP) திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றும் விவசாயிக்கு எக்டருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுவதாக விராலிமலை வட்டார உதவி வேளாண் இயக்குநர் ப.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு விரிவாக்க மையம் (அ) உதவி வேளாண் அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.