News October 19, 2025
புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 19, 2025
புதுகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (அக்.20) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
News October 19, 2025
புதுக்கோட்டை: தேனி வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குடுமியான்மலையில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில், 26 நாட்கள் 25 நபர்களுக்கு தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் அக்.,22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை கல்லூரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
புதுகை மக்களே இந்த எண்களை SAVE பண்ணுங்க!

பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க. மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.