News October 22, 2025
புதுகை: சாலை விபத்தில் காவலர் பலி

திருமயம் அருகே நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சதீஷ் (43) நேற்று (அக்.21) பணி முடிந்து திருகோகர்ணம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புறகரப்பண்ணை அருகே காவலர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மரத்தில் மோதியது. இதில், சதிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 3, 2026
புதுகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<
News February 3, 2026
புதுகை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் <
News February 3, 2026
புதுக்கோட்டை: நூதன முறையில் பணம் அபேஸ்!

ஆலங்குடியைச் சேர்ந்த தனசேகரன் (35) என்பவரை கடந்த ஜன.29-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் பிரபல தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, நகைக்கடன் குறித்து கேட்டு 16 இலக்க எண், OTPயை கேட்டுள்ளார். அதன் பேரில் இவரும் கூறியுள்ளார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.70 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார்.


