News October 19, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

அன்னவாசல் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளியான இவர் இன்று மாங்குடி குவாரியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது எதிர் பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர
Similar News
News October 19, 2025
புதுகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

புதுகை மாவட்டத்தில் 83 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News October 19, 2025
புதுகை: பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

புதுகையிலிருந்து பெருங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் அடையாளம் வாலிபர் ஒருவர் திடீரென விழுந்ததில் அவரது உடல் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கணேஷ்நகர் போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.