News January 27, 2026
புதுகை: குடியரசு தினத்தன்று சட்டவிரோத செயல் – 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நேற்று மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பாரில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 104 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
புதுக்கோட்டை: சிறுவன் மீது போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்து உள்ளான். அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 30, 2026
புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு

அறந்தாங்கி உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் துணை மின்நிலையங்கள் 33/11KV ஆவுடையார்கோவில், அமரடக்கி, மற்றும் வல்லவாரி, துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும், நாளை சனிக்கிழமை (31.01.2026) அன்று காலை 9.00 மணி முதல், பிற்பகல் 4.00 மணிவரை, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News January 30, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று (29.01.2026) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்கு, இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


