News November 24, 2025
புதுகை: கார் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் ஜெகன் எபினேஷ். இவரது தாய் சாந்தி, எபினேஷ் இருவரும் காரில் குடுமியான்மலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது கார் அண்ணாபண்ணை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகன் எபினேஷ், இவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News November 28, 2025
புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
புதுகை: அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
புதுகை: 350 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்

புதுக்கோட்டை மாநகரில், மேல 3ஆம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதில், 350 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்து 6000 அபராதம் விதித்தனர்.


