News August 8, 2024
புதுகை கவிஞருக்கு வைரமுத்து புகழாரம்

புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
Similar News
News January 7, 2026
புதுக்கோட்டை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

புதுக்கோட்டை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News January 7, 2026
புதுக்கோட்டை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜன.13, 20ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதுகைக்கு அடுத்த நாள் அதிகாலை 3.03 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்படும். இதேபோல் தாம்பரம் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டைக்கு 14, 21-ந்தேதி மாலை 6.13 மணிக்கு வந்து 6.15க்கு புறப்படும். SHARE IT
News January 7, 2026
புதுக்கோட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கீரனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. புதுகை மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயமேரி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். SHARE IT


