News November 6, 2025

புதுகை: கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூர் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(17). வேளாண்கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவர் சரியாக கல்லூரிக்கு செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்ததோடு கைப்பேசியையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 8, 2026

புதுக்கோட்டை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

புதுக்கோட்டை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!

News February 7, 2026

புதுகை விடுதிமாணவர்களுக்கான கலைத் திருவிழா

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளை DSS வளாகத்தில் ஆட்சியர் அருணா இன்று (பிப்.7) தொடங்கி வைத்தார். மாணவர்களின் திறன், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றது. DSS மாவட்ட அதிகாரி அமீர் பாட்ஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பள்ளி விடுதி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

News February 7, 2026

புதுகை: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

image

புதுக்கோட்டை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.

Indane: 75888 88824

HP Gas: 92222 01122

Bharat Gas: 1800 22 4344

இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!