News December 30, 2025
புதுகை: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம்(18) முகமது(18). இவர்கள் திருமயம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 2 பேரும் தேர்வெழுதிவிட்டு நேற்று டூவீலரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமயம் சாலையில் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது லாரியின் பின்பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News December 30, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 28 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம் முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 40,888 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
புதுகை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 30, 2025
புதுகை: சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்!

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சண்முகம் (77). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஆலங்குடி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மட்டையன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (53) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சண்முகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


