News February 24, 2026
புதுகை: கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்

புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம். இவர் வீட்டில் இந்த போது 5அடி நீளமுள்ள பாம்பு அவரை கடித்துள்ளது. இந்நிலையில், அப்பாம்பை பையில் போட்டு, கறம்பக்குடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பாம்பை கண்ட மருத்துவர்கள், பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சிக்காக புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Similar News
News February 25, 2026
புதுக்கோட்டை: வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற பிப்.28 மன்னர் கல்லூரி வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் நேரில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார். இந்த நல்வாய்ப்பினை அனைவருக்கும் தெரிய SHARE பண்ணுங்க.!
News February 25, 2026
புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி மாணவர் பலி

விராலிமலை அருகே பெரியார் நகரைச் சேர்ந்தவர் சச்சின்(21). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் நேற்று டூவீலரில் விட்டமாபட்டி பகுதிக்கு சென்றபோது அங்கு குளத்தில் இருந்த மலரை இளம்பெண் கேட்டதால் மலரை பறிக்க முயன்ற சச்சின் நீரில் மூழ்கினார். அதனையடுத்து அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்தபோது சச்சின் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.
News February 25, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


