News December 5, 2025

புதுகை: கடன் தொல்லையால் தற்கொலை

image

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் (46). இவர் கந்தர்வகோட்டையில் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்த நிலையில், அவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால், மன உளைச்சலில் புதன்கிழமை ஆனந்த பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

புதுகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

புதுகை: மது போதையில் அட்டூழியம்!

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லெட்சுமி தியேட்டர் அருகே கருப்பையா (30) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.

News December 5, 2025

புதுகை: கார் மோதி துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த இளையாவயல் கிளை சாலையில் நேற்று அம்மாசி (65) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே காரை ஓட்டி வந்த சத்தியமூர்த்தி (25) என்பவர் மோதியதில் அம்மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சின்னத்தம்பி அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!