News November 16, 2025

புதுகை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 16, 2025

புதுகை: குரூப்-2 போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

புதுகை மாவட்டத்தில் குரூப்-2, 2ஏ போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு (நவ.18) நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுக்கு 645 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குரூப் 2, 2a தேர்வின் முதல் நிலை தேர்வு கூட நுழைவுச்சீட்டு உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நேரில் தொடர்பு கொள்ளும் மாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

புதுகை: வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

image

புதுகை, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு புதுகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கர லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு, மானிய உரங்களை பிற உரங்களும் இணைத்து விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார்.

News November 16, 2025

புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி வரும் (நவ.21) ஆம் தேதி ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் செவி, இயக்கம், அறிவு பார்வை ஆகிய திறன்களில் குறைபாடுள்ளோர், புற உலகச் சிந்தனையற்றோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் பங்கேற்கலாம். இதில் பங்குபெற (நவ.19) ஆம் தேதிக்குள் 04322 223678, 99947 99137 எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!