News December 26, 2024

புதுகை ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

image

புதுகை பொன்நகரை சேர்ந்த ஆசிரியை அமல் லாரோ மியா, கிறிஸ்மஸ்துக்காக நேற்று முன்தினம் கீரனூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கையில் 20 சவரன் நகையும் ₹50,000 பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2024

புதுகை பிரிட்டிஷ் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

image

புதுகை அரிமளம் சாலையில் பிரிட்டிஷ் காலத்து கல்வெட்டினை தமிழ் துறை மற்றும் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் இதில் “ஒற்றை புலி குடியிருப்பு 2 பர்லாங்” என்று எழுதப்பட்டுள்ளது 1680 முதல் 1948 ஆண்டுக்குள் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டாலும் தமிழில் எழுத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 26, 2024

மேயர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

image

புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவர் செந்தில் காலமானார். இந்நிலையில்,  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று அவரது இல்லத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்தார். 

News December 26, 2024

மணமேல்குடி: ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட பணி 

image

மணமேல்குடி ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நாளை (டிச.27) காலை 9 மணியில் இருந்து  கோலேந்திரன், சாத்தியடி, கோட்டைப்பட்டினம், வெட்டிவயல் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அறிவுறுத்தினார்.