News May 2, 2024

புதுகை அருகே மீன்பிடி திருவிழா

image

பொன்னமராவதி
அருகே உள்ள கொப்பனாங்கண்மாயில் மழை பெய்யவும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News August 14, 2025

புதுக்கோட்டையில் பிறந்து சாதித்த பிரபலங்கள்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
✅மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
✅தொகுப்பாளர் கோபிநாத் சந்திரன்
✅ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
✅நடிகர் ஜெமினி கணேசன்
✅பாடகர் செந்தில் கணேஷ்
✅நடிகர் தம்பி ராமையா
✅இயக்குநர் பாண்டிராஜ்
✅நடிகை ரமா
புதுக்கோட்டைக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்! உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்டில் சொல்லுங்க!

News August 14, 2025

புதுகை: விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் விதிப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் சிலைகள் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் மு.அருணா கட்டுபாடுகள் விதித்துள்ளார். நீரில் கரையக்கூடிய பொருட்களால் சிலை செய்திருக்க வேண்டும், காவல்துறை, தீயணைப்பு துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அரசு துறைகளிடம் என்ஒசி பெற்றிருக்க வேண்டும், மதநல்லினத்திற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சிலை நிறுவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

புதுகை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.,14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதுகை மாநகராட்சி 16வது வார்டு வர்த்தக சங்க கட்டிடத்திலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வேங்கடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுமாவடி பிஎம்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மேலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு முல்லை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர்

error: Content is protected !!