News December 23, 2025

புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

image

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

புதுக்கோட்டை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

புதுகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 26, 2025

புதுகை: இனி அலைச்சல் வேண்டாம்

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) புதுகை மாவட்ட அறிவிப்புகளை அறிய: <>https://thanjavur.nic.in/ta/<<>>
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

புதுகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!