News January 8, 2026
புதுகை: அரசு பேருந்து மோதி விபத்து; பெண் படுகாயம்!

சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (59). இவர் இலுப்பூர் பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அஞ்சலிதேவி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அஞ்சலிதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
புதுகை: சாலை விபத்தில் துடிதுடித்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு நேற்று குணசேகரன் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடகாடு அம்புலி ஆற்றின் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
புதுகை: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 10, 2026
புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அழகன்வயல் கிராமத்தில் வரும் ஜன.21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை முன்னிட்டு ஜன.12ம் தேதி முன் மனுக்கள், அழகன்வயல் பி.எம்.எஸ் திருமண மண்டபத்தில் பெறப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது மனுக்களை இதில் அளித்து பயனடையலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


