News September 11, 2025
புதுகை: அரசு அலுவலகத்தின் வாகனம் ஏலம்!

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் வரும் செப்.26-ம் தேதி காலை 10 மணிக்கு TN55 G 0379 என்ற பதிவு எண் கொண்ட மகேந்திரா பொலிரோ வாகனம் ஏலம் விடப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் செப்.24-ம் தேதி காலை 10 மணிக்கு அடையாள அட்டை, ஜிஎஸ்டி என்னுடன் ரூ.2000 முன்பணம் செலுத்தி, வாகனத்தை ஏலம் எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
புதுகை: அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் படிப்பு

புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் +2 தேர்ச்சி பெற்றவர்கள் கார்டியோ நூட்புநர், அவசர சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர், டயாலிசிஸ், மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பல்வேறு ஒரு வருட சான்றிதழ் படிப்புக்கு வரும் 12ஆம் தேதிக்குள் 10,+2 படித்த அசல் சான்று, ஜாதி சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
புதுகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டால் Call Now

புதுகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 11, 2025
புதுகை: நடந்து சென்றவர் மீது மோதிய பைக்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அடுத்த புளிச்சங்காடு, கைகாட்டி சாலையில் சண்முகம் (78) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த சித்திரவேலு (50) என்பவர் மோதியதில், சண்முகம் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரில் வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.