News November 22, 2025
புதுகை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் காவல் நிலைய எல்லையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்து கிடந்தார். அவரை நமணசமுத்திரம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைல்லி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 9498100762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 22, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
புதுக்கோட்டையில் கோயில் உண்டியல் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை பக்தர்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு உண்டியல் இல்லை. அதனை அடுத்து வயல் பகுதியில் அந்த உண்டியல் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரிமளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 22, 2025
ஆண்களுக்கான நவீன வாசக்டமி – கலெக்டர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் 21.11.25 டூ 4.12.25 வரை நவீன வாசக்டமி விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, “குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கனவு குடும்பத்தில் ஆண்கள் பங்கேற்றல் மட்டுமே நனவு” என்பதாகும். எனவே ஆண்கள் எளிமையான குடும்ப கருத்தடை செய்து கொள்ளலாம். பக்க விளைவு கிடையாது, தையல் தேவையில்லை, கடின உழைப்பு மேற்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


