News April 12, 2025
புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
புதுகை: பைக் வாங்க அரசு மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 29, 2025
புதுக்கோட்டை: தவறி விழுந்தவர் பரிதாப பலி

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (51) இவர் (டிச.26) ஆலங்குளம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி காவல் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அழியாநிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.29) பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள உள்ளனர். இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட மன் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து இடங்களிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


