News March 27, 2024
புதுகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை ,பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 47 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த கற்பித்தல் மையங்களில் கற்பித்தல் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 26.3.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாஹி ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Similar News
News October 25, 2025
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்டகாவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 25, 2025
முதல்வரிடம் காசோலையை வழங்கிய அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டில் 52 கோடியே 72 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டியதில், 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த ஈவுத்தொகையான 10 கோடியே 39 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி காசோலையை வழங்கினார்.
News October 25, 2025
முதல்வருடன் கலந்துரையாடிய அமைச்சர் ரகுபதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடல் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர், திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.


