News December 21, 2025

புதிய ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. HAPPY NEWS

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைவில் வழங்கப்பட இருப்பதால், எப்போது ரேஷன் கார்டு கிடைக்கும் என புதிதாக விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 21 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும்.

Similar News

News December 30, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். <>இந்த<<>> லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 30, 2025

கம்பீரே தொடர்வார்: ராஜீவ் சுக்லா

image

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு <<18695088>>தனி பயிற்சியாளரை<<>> நியமிக்க BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 2027 வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார் என BCCI துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

News December 30, 2025

தற்கொலை முயற்சி செய்த அஜிதா முதல் சபதம்

image

உள்கட்சி விவகாரத்தை தீர்க்க கோரி விஜய்யின் காரை மறித்து பரபரப்பை கிளப்பியவர் அஜிதா. தற்கொலைக்கு முயன்றதால் தவெகவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அஜிதா, ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இந்நிலையில் தனது X-ல், 2026-ல் தளபதியாரை (விஜய்) முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன் என சூளுரைத்துள்ளார்.

error: Content is protected !!