News February 23, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. அரசின் மகிழ்ச்சி செய்தி

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் Smart Card வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 2025 டிச. மாதத்திற்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு Smart Card அச்சிடும் பணிகள் 90% நிறைவடைந்ததாகவும், ஒரிரு நாள்களில் தாலுகா அலுவலகங்களுக்கு அவை சென்று சேரும் என்றும் கூறப்படுகிறது. TN முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News February 24, 2026
முடிவை மாற்றினார் ஓபிஎஸ்.. அரசியலில் அடுத்த பரபரப்பு

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெ., சிலைக்கு, இன்று அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவிப்பதாக OPS முன்னரே கூறியிருந்தார். இந்நிலையில், போடி MLA அலுவலகத்தில் ஜெ., போட்டோவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே திமுகவில் OPS ஐக்கியமாகவுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், தனது குருவாக கருதும் ஜெ., பிறந்தநாளில் செய்யும் வழக்கத்தை OPS கைவிட்டது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
News February 24, 2026
திமுக அலங்கோல ஆட்சியால் தினமும் இது நடக்குது: EPS

நாடாளுமன்றத்தில் நிறைய MP-களை வைத்திருந்தாலும் தமிழக உரிமைகளைக் காப்பாற்றவும், இருமொழி கொள்கையை நிலைநாட்டிடவும், திறனற்ற அரசாக திமுக அரசு இருப்பதாக EPS சாடியுள்ளார். இந்த அலங்கோல ஆட்சியில் நாள்தோறும் TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறிய அவர், இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்றார். மேலும், அதற்கு அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News February 24, 2026
5,138 காலியிடங்கள், டிகிரி போதும்.. இன்றே கடைசி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் <


