News May 12, 2024
புதிய மோசடி காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை: மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் Gpay QR code scan செய்யுமாறு கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR code scan செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News August 31, 2025
தென்காசியில் நாய்கள் கடித்து ஆடுகள் பலி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த லியாகத் அலி என்பவர் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லியாகத் அலி வழக்கம்போல இன்று காலை ஆட்டுப்பண்ணைக்கு சென்ற போது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிகாலையில் ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்துள்ளது.
News August 30, 2025
தென்காசி பெட்ரோல் தரமாக இல்லையா??

தென்காசி மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா?? உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க..
இந்தியன் ஆயில் – 18002333555
BHARAT பெட்ரோல் – 1800 22 4344
H.P பெட்ரோல் – 9594723895 நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News August 30, 2025
தென்காசி ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.